வியாசர்பாடியில் ஓடும் ரெயிலில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு
வியாசர்பாடியில் ஓடும் ரெயிலில் வாலிபரிடம் செல்போனை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
பெரம்பூர்,
சென்னை அடுத்த ஆவடி பகுதியை சேர்ந்தவர் சின்ன சாமுவேல் (வயது 24). இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு பணிக்காக ஆவடியில் இருந்து ராயபுரத்திற்கு மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார். வியாசர்பாடி அருகே சென்றபோது ஓடும் ரெயில் வாசலில் நின்று செல்போன் பேசி வந்து உள்ளார். அப்போது வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் தாண்டியவுடன் ரெயில் பெட்டிக்குள் ஏறிய மர்மநபர்கள் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இருந்த சாமுவேலிடம் செல்போனை பறிக்க முயன்ற நிலையில், அதை அவர் தடுக்க முயன்றபோது ஓடும் ரெயிலில் இருந்து சாமுவேல் தவறி கீழே விழுந்தார்.
அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து பெரம்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.