ரேஷன் அரிசியை பதுக்கியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது

ரேஷன் அரிசியை பதுக்கியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-25 23:05 GMT
சேலம்:
சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 
இந்த நிலையில் அவரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்திட, சேலம் மாநகர் போலீஸ் கமிஷனரிடம் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திக்கை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்