எருமப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி
எருமப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் எருமப்பட்டியில் நடந்தது. குழந்தைகள் திட்ட அலுவலர் சங்கீதா வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா முகாமை தொடங்கி வைத்து, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் பயன்பாடு குறித்தும், குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் வட்டார திட்ட அலுவலர் பானுமதி பயிற்சி அளித்தார்.
இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.