2 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் பெரியப்பா கைது; விபத்தில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
2 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் பெரியப்பா கைது செய்யப்பட்டார்
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெரலூர் கேட் பகுதியை சேர்ந்தவர் தீபு. இவரது தம்பி, தொட்டபள்ளாப்புராவில் வசிக்கிறார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபள்ளாப்புராவுக்கு வந்த தீபு, தனது சகோதரரின் குழந்தையை நெரலூர் கேட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அந்த குழந்தையை தீபு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த சந்தர்ப்பத்தில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. உடனே அத்திபெலே போலீஸ் நிலையத்திற்கு சென்று காரில் வரும் போது சகோதரர் குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறினார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். ஆனால் தீபு மீது சந்தேகம் ஏற்பட்டதால், 2 வயது குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் பெரியப்பாவான தீபு கைது செய்யப்பட்டார். விசாரணையில், 2 வயது குழந்தையை தீபு, பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. விசாரணைக்கு பின்பு தீபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.