ஆலங்குளம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ஆலங்குளம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
நெல்லை:
சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) பேசுகையில், ‘‘எனது தொகுதியில் உள்ள ஆலங்குளம் பேரூராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், அங்கு 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளை உடனடியாக தொடங்க ஆவன செய்ய வேண்டும்’’ என்று கேட்டு கொண்டார்.
இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கையில், ‘‘இதுகுறித்து ஆணையாளருக்கு சொல்லப்பட்டு, விரைவாக இந்த பணிகளை முடித்து, குடிநீரை அதிகப்படுத்தி தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.