கடையநல்லூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அச்சன்புதூர்:
கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில், ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கர்நாடகத்தில் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள், த.மு.மு.க. யாகூப், எஸ்.டி.பி.ஐ. யாசகான், என்.டி.எப். சதாம் உசேன், மஸ்ஜித் முபாரக், ஜமாஅத் பஷீர் அஹமது, அக்ஸா கமிட்டி முஹிபுல்லாஹ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா லுக்மான், முஸ்லிம் லீக் செய்யது மசூது, ஜமாத்தே இஸ்லாமி பீர் முஹம்மது ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை செய்யது இப்ராஹிம், த.மு.மு.க. முகம்மது பாசித் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.