சேலம் மாநகரில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்
சேலம் மாநகரில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகரில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராணி, பள்ளப்பட்டிக்கும், காந்திமதி, மீனாட்சிநாதன் ஆகியோர் அழகாபுரத்திற்கும், ஜெகநாதன் கொண்டலாம்பட்டிக்கும், கஸ்தூரி வீராணம் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் கந்தவேல் சூரமங்கலத்திற்கும், கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜு அன்னதானப்பட்டிக்கும், அழகாபுரம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் செவ்வாய்பேட்டைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.