டி.என்.பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்தது- டிரைவர் தப்பி ஓட்டம்
டி.என்.பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்தது. டிரைவர் தப்பி ஓடினார்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்தது. டிரைவர் தப்பி ஓடினார்.
சரக்கு வேன் கவிழ்ந்தது
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து கிடந்தது. அதிலிருந்த மூட்டைகள் சிதறி கிடந்தன.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
ரேஷன் அரிசி மூட்டைகள்
அப்போது சிதறி கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் 25 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
ரேஷன் அரிசியை கடத்தி சென்றபோது சரக்கு வேன் விபத்தில் சிக்கியதும், உடனே அதிலிருந்து டிரைவர் வெளியே குதித்து அங்கிருந்து தப்பித்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு வேனுடன் 25 ரேஷன் அரிசி மூட்டைகளையும் ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.