இந்தியாவில், ஏற்றுமதியில் கர்நாடகத்திற்கு 3-வது இடம்
இந்தியாவில், ஏற்றுமதியில் கர்நாடகத்திற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது
பெங்களூரு: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் எந்தெந்த மாநிலங்கள் அதிக ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளன என்பது குறித்து மத்திய அரசின் நிதி ஆயோக், ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில் ஏற்றுமதியில் குஜராத்திற்கு முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. மராட்டியத்திற்கு 2-வது இடமும், கர்நாடகத்திற்கு 3-வது இடமும் கிடைத்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டில் கர்நாடகம் 9-வது இடத்தில் இருந்தது. தற்போது கர்நாடகம் 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகம் 4-வது இடத்திலும், அரியானா 5-வது இடத்திலும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.