தென்காசியில் 4 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

தென்காசியில் 4 கடைகளுக்கு சீல் வைத்தனர்

Update: 2022-03-25 21:44 GMT
தென்காசி:
தென்காசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவற்றை இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் செலுத்துமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஒலிப்பெருக்கி மூலமும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தென்காசி மேலமாசி வீதியில் உள்ள 4 கடைகளுக்கு கடந்த 1992-ம் ஆண்டு முதல் வரி செலுத்தப்படாததால், மொத்தம் ரூ.47 ஆயிரத்து 196 வரி நிலுவைத்தொகை உள்ளது. இதுகுறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் பாரிஜான் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலையில் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்