ஆசிரியை வீட்டில் திருட்டு

ஆசிரியை வீட்டில் திருட்டு

Update: 2022-03-25 21:31 GMT
மதுரை
மதுரை புதுவிளாங்குடி சொக்கநாதபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 58). இவரது மனைவி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில் இவரது வீட்டின் முன் கதவு உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்