மேலூர்
மேலூர் அருகே சிவகங்கை ரோட்டில் உள்ளது பெருமாள்பட்டி. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெருமாள்பட்டிக்கு தனியாக ஒரு ரேஷன் கடை வேண்டும் என பல முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி நேற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் பெருமாள்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.