5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து 2 பேரை கைது போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-25 21:30 GMT
மதுரை
திருமங்கலத்தில் இருந்து பெருங்குடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பெருங்குடியை அடுத்த மண்டேலா நகரில் உள்ள ஈசனேரி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடையுள்ள 80 மூடைகளில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் தலா 50 கிலோ எடையில் 2 மூடைகளில் ஆயிரம் கிலோ எடை கொண்ட கோதுமை ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலை உரிமையாளர் மதுரையைச் சேர்ந்த ரகு(வயது 24), சத்தியசாய் நகரைச் சேர்ந்த சோவியத் (23) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி, கோதுமை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்