தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் நகர் 30-வது வார்டு பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ெசம்மங்குண்டு தெருவில் மக்கள் பயன்பாட்டிற்காக ஊருணி உள்ளது. இந்நிலையில் இந்த ஊருணி ஆக்கிரமிக்கபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊருணியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
குடிநீர் தட்டுப்பாடு
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே ஆத்தங்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடால் மிகவும் சிரமப்படுகிறார்கள். பலகிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று நீரை எடுத்து வருகிறார்கள். சிலர் நீரை காசு கொடுத்தும் வாங்குகி்ன்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சேதமடைந்துள்ள குழாயை சரிசெய்ய வேண்டும்.
அரவிந்த்சாமி, சாக்கோட்டை.
மாற்றப்பட்ட கட்டிடம்
ராமநாதபுரம் கீழக்கரை புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் மின்கட்டண வசூல் மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த மையம் பல கிலோமீட்டர் தள்ளி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணம் கட்ட வரும் நுகர்வோர், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றியமைக்கபட்ட மின்கட்டண வசூல் மையத்தை பழைய கட்டிடத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.