கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.;
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தட்டார தெருவை சேர்ந்தவர் தங்ககணபதி(வயது 73). இவர் தனது குடும்ப தேவைக்காக ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடந்த 2012-ம் ஆண்டு தனது நிலத்தை ஒரு பெண்ணின் பெயரில் நம்பிக்கை கிரையம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்த பெண் அந்த நிலத்தை கடந்த 2014-ம் ஆண்டு மற்றொரு பெண்ணுக்கு கிரையம் செய்து கொடுத்தது கடந்த 2015-ம் ஆண்டு தங்ககணபதிக்கு தெரியவந்தது. மேலும் அந்த பெண் அந்த நிலத்தில் கட்டிடம் கட்ட முற்பட்டபோது, தங்ககணபதி தடுத்ததாக கூறி, அந்த பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஒரு கவுன்சிலர் மற்றும் போலீசார் தன்னை மிரட்டுவதாக கூறி அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மனைவி, மகள், பேரனுடன் வந்து தங்ககணபதி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.