நெல்லை: முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்;
நெல்லை:
பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 85). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.