நெல்லை: லேப் டெக்னீசியன்கள் ஆர்ப்பாட்டம்

லேப் டெக்னீசியன்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-03-25 21:06 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கம் (லேப் டெக்னீசியன்) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
தலைமை லேப் டெக்னீசியன் பதவி உருவாக்கத்தில் உள்ள தேக்கநிலையை சரி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட லேப் டெக்னீசியன்கள், ஆய்வக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க முன்னாள் மாநில தலைவர் செந்தில் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் சிந்து, பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட திரளான லேப் டெக்னீசியன்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்