சரக்கு ரெயிலில் 1,600 டன் அரிசி மூட்டைகள் வந்தன
சரக்கு ரெயிலில் 1,600 டன் அரிசி மூட்டைகள் புதுக்கோட்டை வந்தன
புதுக்கோட்டை
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் நேற்று வந்தன. பொதுவினியோக திட்ட அதிகாரிகள் இதனை லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.