கால்நடை ஆஸ்பத்திரி கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

திருவையாறு அருகே கீழ திருப்பூந்துருத்தியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் ஜீப்பை முற்றுகையிட்டனர்.;

Update: 2022-03-25 20:13 GMT
திருவையாறு:
திருவையாறு அருகே கீழ திருப்பூந்துருத்தியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் ஜீப்பை முற்றுகையிட்டனர். 
தாசில்தார் ஜீப்பை முற்றுகையிட்டனர்
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.  நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை ஆஸ்பத்திரி  கீழ திருப்பூந்துருத்தி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட உள்ளது. இந்த இடத்தை  திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் மஞ்சு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர்கள் ஆகியோர் பார்வையிட வந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் ஜீப்பை முற்றுகையிட்டனர். அப்போது கிராமமக்கள் தங்கள் பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட  கூடாது. அதற்கு பதில் வேறு இடத்தில் ஆஸ்பத்திரி கட்டிக்கொள்ளலாம் என்றனர். 
பரபரப்பு
இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்