பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
வத்திராயிருப்பு,
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
4 அடி உயர்வு
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் அமைந்துள்ளது.
இதில் பெரியாறு அணையின் முழு கொள்ளளவு 47.56 அடியாகும். பிளவக்கல் பெரியாறு அணையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 25 அடி நீர் இருப்பு இருந்தது. தற்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது. தற்போது அணையில் ந 29 அடி தண்ணீர் உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கோவிலாறு அணையின் முழு கொள்ளளவு 42.64 அடியாகும். தற்போது அணையில் 19.50 அடி தண்ணீர் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். மழையின் காரணமாக நீர்பிடிப்பு பகுதி, நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.