சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது

சிவகாசியில் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டியவரை ேபாலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-25 19:48 GMT
சிவகாசி, 
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் சித்துராஜபுரம்-கிச்சநாயக்கன்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜான்பீட்டர் (வயது 40) என்பவர் கையில் அரிவாளுடன் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தார். அப்போது சப்- இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், ஜான்பீட்டரை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த ஜான்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாசிடம் அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்