ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடும் தண்டனை அளிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி.லிங்கம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் பழனி குமார், இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் மாரீஸ்வரி, ஒன்றிய செயலாளர் சக்கணன், நகரச்செயலாளர் முத்துக்குமார் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.