ஆண்டாள் சுக்கிரவார புறப்பாடு உற்சவம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் சுக்கிரவார புறப்பாடு உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-25 19:29 GMT
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் சுக்கிரவார புறப்பாடு உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் சுக்கிரவார புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு ஆண்டாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆண்டாள் சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முன் செல்ல கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்