சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஞ்சாயத்து ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் மாணவிக்கு தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update:2022-03-26 00:55 IST
ஸ்ரீவில்லிபுத்தூர், 
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஞ்சாயத்து ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் மாணவிக்கு தொல்லை கொடுத்தவருக்கு  7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள மாலையாபுரத்தை சேர்ந்தவர் வெண்ணி என்ற அய்யனார் (வயது 53). இவர் கிராம பஞ்சாயத்தில் குடிதண்ணீர் திறந்து விடும் வேலை பார்த்து வந்தார். கடந்த 11-5-2018 அன்று 13 வயது சிறுமிக்கு அய்யனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ ேகார்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், அய்யனாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரையும் செய்தார். 
மற்றொரு சம்பவம்
ராஜபாளையத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிறிஸ்துராஜா நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). டிரைவர். இவர் அங்குள்ள ஒரு பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர்போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது.  இந்த வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து, சுரேஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரையும் செய்தார்.

மேலும் செய்திகள்