அரசு பஸ் மீது கார் மோதல்; 6 பேர் படுகாயம்

கிருஷ்ணராயபுரம் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-03-26 00:44 IST
கிருஷ்ணராயபுரம், 
அரசு பஸ் மீது கார் மோதல்
திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் பிரிவு சாலை அருகே நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது கரூர் வெங்கமேடு அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்த கருணாகரன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வெள்ளைய கவுண்டன் பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (29), தாந்தோணிமலை அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்த நகுல்சாமி (51), அவரது மனைவி பரமேஸ்வரி (45), மகள் பிரியங்கா (21), மகன் சஷ்டி பிரியன் (17) மற்றும் டிரைவர் கருணாகரன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சிகிச்சை
இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்