ஆலங்காயம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
ஆலங்காயம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 21). இவருக்கும் வாணியம்பாடி குரும்பதெரு பகுதியை சேர்ந்த திருப்பதி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 6 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கீதா கணவரிடம் இருந்து பிரிந்து, கூவல்குட்டை பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் ஆம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில், வீட்டில் தனியாக இருந்த சங்கீதா திடீரென தூக்குப்போட் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.