தூக்குப்போட்டு ஓட்டல் தொழிலாளி தற்கொலை
மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:
திருவாரூர் அருகே திருவிடைவாசல் ஆலத்தங்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 66). இவர் மயிலாடுதுறையில் தங்கி தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் நேற்று அதிகாலை மயிலாடுதுறை ரெயிலடி மாப்படுகை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் தியாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் தியாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தியாகராஜன் மகன் கிருஷ்ணகுமார் (37) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.