என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

நாகர்கோவிலில் தந்தையின் உடல்நிலை பாதிப்பால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-25 18:01 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவிலில் தந்தையின் உடல்நிலை பாதிப்பால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயர்
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹென்றி (வயது65). இவரது மகன் கிங்ஸ்லின் (24). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு உணவு பொருட்களை வீடுகளில் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தந்தை ஹென்றி உடல் நிலை பாதிக்கப்பட்டார். 
இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. தந்தையின் நிலையை பார்த்து கிங்ஸ்லின் மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ைசக்காக சோ்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கிங்ஸ்லின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்