ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நத்தம் அருகே குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளில் கோர்ட்டு உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
நத்தம் :
நத்தம் அருகே இடையபட்டியில் உள்ள குளம் மற்றும் சின்னக்குளம் நீர்நிலை பகுதிகளில் சிலர் ஆக்கிரமித்து சோளம் மற்றும் மொச்சை பயிரிட்டிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நத்தம் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் வருவாய்த்துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின்போது மண்டல துணை தாசில்தார் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கிருத்திகா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.