திருக்கோவிலூர் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாவிட்டால் ஜப்தி ஆணையர் எச்சரிக்கை
திருக்கோவிலூர் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாவிட்டால் ஜப்தி ஆணையர் எச்சரிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர், தொழில், சொத்து உள்ளிட்ட வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் கட்டி முடிக்க வேண்டும். குறிப்பாக நீண்ட காலமாக பாக்கி வைத்து இருப்பவர்கள் உடனடியாக பணம் கட்ட வேண்டும். இல்லையேல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல் பொது இடங்களில் ஒட்டப்படும், திருக்கோவிலூர் நகராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அப்புறப்படுத்தப்படுவார்கள்.
இ்வ்வாறு அவர் கூறினார்.