ரூ.92 கோடியே 74 லட்சம் நகைக்கடன் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.92 ேகாடியே 74 லட்சம் மதிப்புள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யபட்டு உள்ளது. இதில் 23 ஆயிரத்து 599 பேர் பயன் அடைந்து உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-03-25 17:39 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.92 ேகாடியே 74 லட்சம் மதிப்புள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யபட்டு உள்ளது. இதில் 23 ஆயிரத்து 599 பேர் பயன் அடைந்து உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

நகைக்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் நகைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டுறவு இணைபதிவாளர் ஜீனு முன்னிலை வகித்தார்.
இதில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு
கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் நகைகள் பயனாளிகளிடம் வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

23,599 பேர் பயன்

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களில் கடன் தள்ளுபடி செய்வதற்கு தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இதன் அடிப்படையில் பிற மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்திற்கு வந்து களஆய்வு மேற்கொண்டு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.அதன் அடிப்படையில், நமது மாவட்டத்தில் உள்ள 166 கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்குட்பட்டு நகைக்கடன் பெற்ற 23 ஆயிரத்து 599 பேருக்கு ரூ.92 கோடியே 74 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்குரிய சான்றிதழ்களும், நகைகளும் உரியவர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் அந்த கூட்டுறவு நிறுவனத்தில் மேல்முறையீடு செய்யலாம். 
இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் வெங்கடலெட்சுமி, குழந்தைவேல், தொல்காப்பியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்