பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.

Update: 2022-03-25 17:38 GMT
திண்டுக்கல்: 

‘சைபர் கிரைம்’ குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதற்கு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார், இணையதளம் மூலம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்தும், அவற்றில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமில் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்