நூலகம் செயல்படுமா?
கண்டமங்கலத்தில் நூலகம் செயல்படுமா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.;
திருவெண்காடு:
சீர்காழி அருகே பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நூலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த நூலகத்திற்கு அருகே நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த பகுதியில் ஏராளமான இளைஞர்கள் வசித்து வருகின்றனர். நூலக கட்டிடம் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது. இதனால் தற்போது நூலகத்திற்கு செல்ல வேண்டு மென்றால் வைத்தீஸ்வரன் கோவில் அல்லது சீர்காழி செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்கு உள்ள நூலகத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’ என்றனர்.