96 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது

எஸ்.புதூர் அருகே 96 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-25 17:31 GMT
எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே புழுதிபட்டி சத்திரம் கடை பகுதியில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நத்தம் அருகே உள்ள பட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜபிரபு (வயது 26), 48 மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 48 மதுபாட்டில்களுடன் ராஜபிரபுவை கைது செய்தனர். இதேபோல் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த பட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (25) விற்பனைக்காக 48 மதுபாட்டில்கள் கொண்டு சென்றதை தொடர்ந்து அவரையும் கைது செய்தனர். இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்