கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தக்கட்டியில் இருந்து உரிகம் செல்லும் சாலையில் வனப்பகுதியையொட்டி வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை வெயில் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளன. அந்த தொட்டியில் நேற்று யானைகள் தண்ணீர் குடித்து தாகம் தணித்ததை படத்தில் காணலாம்.