ராயக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது
ராயக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள சொன்னேநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி சீத்தாம்மாள் (வயது40) இவருக்கும், அவரது உறவினரான விவசாயி முருகன் (40) குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த முருகன் சீத்தாம்மாளை தாக்கினார். இதுகுறித்து அவர் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.