மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தகவல்

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-25 16:41 GMT
திருப்பத்தூர்

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு. கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு 2021--22-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு  விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொள்ளலாம். விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் இன்று (சனிக்கிழமை) தேதி முதல் 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்