பழங்குடியினருக்கு ரேஷன்கார்டுகள்
காரிமங்கலம் தாலுகாவில் பழங்குடியினருக்கு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன.
காரிமங்கலம்:-
தர்மபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள பழங்குடியின மக்கள், மாற்றுத்திறனாளிகள், வயதான முதியோர்களின் வீட்டுக்கே ெசன்று ரேஷன்கார்டுகள் வழங்க ேவண்டும் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் வழிகாட்டுதலின் பேரில் காரிமங்கலம் தாலுகா பொம்மஅள்ளி கிராமம் அண்ணா நகரில் வசிக்கும் பழங்குடியினர் மக்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பங்களுக்கு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன. இந்த ரேஷன்கார்டுகளை வட்ட வழங்கல் அலுவலர் குப்புசாமி வழங்கினார்.