மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.;
பொம்மிடி:-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). இவர், நேற்று காலை சேலம் அரூர் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெருமாளை பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் அந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.