முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி:-
தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், துரைராஜ், சக்திவேல், கலைவாணன், சரவணன், நடராஜ், பாக்கியராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய பென்சன் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.