குன்னூர் கன்டோன்மெண்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டிய 10 கட்டிடங்கள் இடிப்பு
குன்னூர் கன்டோன்மெண்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டிய 10 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
குன்னூர்
குன்னூர் அருகே கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் உள்ளது. இந்த பகுதி ராணுவ முகாம்களை ஒட்டி இருப்பதால் கட்டிடங்கள் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அத்துடன் முறையான அனுமதி பெற்ற பின்னர்தான் கட்டிடங்கள் கட்ட வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கேட்டில் பவுண்டு, பாய்ஸ் கம்பெனி, குர்க்கா கேம்ப், சின்னவண்டிசோலை ஆகிய பகுதிகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 10 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.