கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-25 16:40 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பொன்மலை கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற 4 பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் ½ கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த கிருஷ்ணகிரி லட்சுமண ராவ் தெரு மஞ்சுநாதன் (வயது 27), ஜக்கப்பன் நகர் தேவராஜ் (23), கோ-ஆப்ரேட்டிவ் காலனி விக்னேஷ் (22), தம்மண்ண நகர் நிதிஷ்குமார் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்