கோத்தகிரி அருகே வீட்டின் கூரையில் பதுங்கிய 2 பாம்புகள் பிடிபட்டன
கோத்தகிரி அருகே வீட்டின் கூரையில் பதுங்கிய 2 பாம்புகள் பிடிபட்டன
கோத்தகிரி
கோத்தகிரி நெடுகுளா அருகே குருக்குத்தி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரின் வீட்டின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டது ஆகும். இந்த கூரையில் 2 சாரைப்பாம்புகள் பதுங்கி இருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் வீட்டின் கூரையின் மீது ஏறி ஓடுகளுக்குள் பதுங்கி இருந்த 2 சாரைபாம்புகளை லாவகமாக பிடித்தனர். அது 8 அடி நீளம் ஆகும். பின்னர் அந்த பாம்புகளை சாக்குப்பையில் போட்டு லாங்வுட்சோலை வனப்பகுதியில் விட்டனர்.