ஓசூர் மூக்கொண்டப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ஓசூர் மூக்கொண்டப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மூக்கொண்டப்பள்ளி தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். இதில், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசு டாக்டர்கள், அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.