தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தலைஞாயிறு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-25 16:03 GMT
வாய்மேடு:
தலைஞாயிறு அருகே காடந்தேத்தியை சேர்ந்த முனியாண்டி மகன் முத்தரசன் (வயது24). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா (21). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. முத்தரசன் வீட்டில் குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முத்தரசன் வீட்டுக்கு பின்புறம் உள்ள கீற்றுக் கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முத்தரசன் உடலை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட முத்தரசனுக்கு திருமணமாகி 18 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்