விஷ மாத்திரையை தின்று ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருவட்டார் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் ஆட்டோ டிரைவர் விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-25 15:45 GMT
திருவட்டார்:
திருவட்டார் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் ஆட்டோ டிரைவர் விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆட்டோ டிரைவர்
திருவட்டார் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வேர்க்கிளம்பி கோணத்துவிளையைச் சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 30). இவர் வேர்க்கிளம்பி பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். 
கடந்த 6 ஆண்டுகளுக்கு அதே பகுதிைய சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுனில்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவி பிரிந்து சென்றார்
 இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மனைவி குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். சுனில்குமார் பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால், சுனில்குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். 
தற்கொலை 
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுனில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்