சாலை பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருத்தணி அருகே ரூ.46 கோடியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

Update: 2022-03-25 15:36 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரத்தில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க கடந்த 2018-ம் ஆண்டு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு ரூ.46 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கடந்த ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலம், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியில் ரெயில் தண்டவாளத்திற்கு இருபுறமும் உயர்மட்ட பாலத்தை கட்டினர். மேலும், ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேம்பாளம் அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருத்தணி அருகே ரூ.46 கோடியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், கிடப்பில் போடப்பட்டு இருக்கும் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து, வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு விடுமாறு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர்கள் சஸ்மிலிஷ் பெர்ணான்டோ, கார்த்திகேயன், உதவி பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்