பையப்பனஹள்ளி-எம்.ஜி.ரோடு இடையே மெட்ரோ ரெயில் சேவை நாளை நிறுத்தம்

பராமரிப்பு பணி எதிெராலியாக பையப்பனஹள்ளி-எம்.ஜி.ரோடு இடையே மெட்ரோ ரெயில் சேவை நாளை நிறுத்தம்

Update: 2022-03-25 15:19 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும் (ஊதா நிறம்), நாகசந்திராவில் இருந்து அஞ்சனாபுரா வரையிலும் (பசுமை நிறம்) 56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊதா நிற பாதையில் இந்திராநகர்-விவேகானந்தா மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) பையப்பனஹள்ளி-எம்.ஜி.ரோடு வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியுள்ளது.

  அதே போல் கெங்கேரி முதல் எம்.ஜி.ரோடு வரை மெட்ரோ ரெயில்களின் போக்குவரத்து சேவை எப்போதும் போல் இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஊதா நிற பாதையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமை நிற பாதையில் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்