மின்சார ரெயிலில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

மின்சார ரெயிலில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-25 15:03 GMT
கோப்பு படம்
மும்பை, 
மும்பை சர்னி ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 11-ந் தேதி 24 வயது இளம்பெண் சர்ச்கேட் செல்ல மின்சார ரெயிலில் பயணம் செய்தார். அப்போது பெட்டியில் தனியாக இருந்த இளம்பெண்ணை குறிவைத்து வாலிபர் திடீரென அந்த பெட்டியில் ஏறினார். பின்னர் இளம்பெண் அணிந்திருந்த தங்கசங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் இளம்பெண் சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்து சத்தம் போட்டு உள்ளார். இந்த முயற்சியில் வாலிபரின் நகங்கள் பட்டு காயம் அடைந்தாள். நகைபறிப்பு முயற்சியில் தோல்வி அடைந்த வாலிபர் மரின்லைன் அருகே ரெயில் வந்த போது இறங்கி தப்பி சென்று விட்டார். 
பின்னர் இது பற்றி அவர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பாந்திராவை சேர்ந்த திபேந்திரா குமார் (வயது26) என்பவரின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.
-------------------------------

மேலும் செய்திகள்