மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-03-25 14:53 GMT
திருச்சி, மார்ச்.26-
திருச்சியில் மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மூதாட்டி பலாத்காரம்
ஸ்ரீரங்கம் போலீஸ் சரகம் திருவானைக்காவல் பகுதியில் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த 65 வயதான மூதாட்டியை  ராஜா (40), என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான ராஜா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே, ராஜா தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், அவரை ஓராண்டு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்